TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Wednesday, May 17, 2017

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (30/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-04-2017 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் பெண்கள் பயான் மேலச்செட்டி தெரு சகோதரர் சேட் அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்றது. இதில் ஜாஸ்மின் ஆலிமா உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (23/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-04-2017 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் மேலச்செட்டித் தெருவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் *நற்பண்புகள்* என்ற தலைப்பில் ஆலிமா உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

மன்னார்குடி ஆர்ப்பாட்ட விளம்பர போஸ்டர்கள் : கிளை-1 (21/04/2017)


மன்னார்குடியில் மாட்டு பிரியாணி வியாபாரம் செய்ததற்க்காக நம் சகோதரர்கள் இருவரை கைது செய்து காடுமிராண்டித்தனமாக அடித்து சித்தரவதை செய்து காவிகளுக்கு துணை போகும் காவல்துறை அதிகாரியை கண்டித்து வரும் சனிக்கிழமை (22/04/2017) மாலை 4 மணிக்கு நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விளம்பர போஸ்டர்கள் 13 இன்று 21/04/2017 அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது....

*மாற்று மத இலவச புக்ஸ்டால்* : கிளை-2 (12/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12.4.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்யும் வகையில் பட்டக்கால் தெரு மெயின்ரோட்டில் மாற்று இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.
இதில் கீழ் கானும் புத்தகங்கங்கள் மற்றும் நோட்டீஸ்கள் இலவசமாக வினியோகம் செய்து தாவா செய்யப்பட்டது.
*கர்த்தரின் அறிவுரைகள் - 1100 நோட்டீஸ்கள்*
*இயேசுவின் மரணம் நிஜமா? கற்பனையா? - 4 புத்தகம்*
*பைபிளில் நபிகள் நாயகம் - 26 புத்தகம்*
*இறைவனுக்கு மகனா? - 33 புத்தகம்*

மாற்று மத தாவா புத்தக அன்பளிப்பு : கிளை-2 (12/04/2017)
அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 12-04-2017 இன்று *ஒரு மாற்று மத சகோதரிக்கு இஸ்லாம் பற்றி தாவா செய்து* கீழ்காணும் புத்தகங்கள் அன்பளிக்கப்பட்டது....
1) அர்த்தமுள்ள இஸ்லாம்
2) அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும்
*அல்ஹம்துலில்லாஹ்...*

மாற்று மத தாவா விளம்பர ஃப்லக்ஸ் : கிளை-1 (17/04/2017)


திருக்குர்ஆனை படியுங்கள் என்ற தலைப்பில் மாற்று மத சாகோதர்களுக்கான இலவச குர்ஆன் அன்பளிப்பு விளம்பர பிளக்ஸ் ஒன்று 10*12 என்ற அளவில் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக நாகை மெயின் ரோடு மணற்க்கேணித் தெரு அருகில் 17-04-2017 அன்று வைக்கப்பட்டது...அவசர இரத்த உதவி : கிளை-1 (16/04/2017)அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 16-04-2017 அன்று நன்னிலத்தை சேர்ந்த சகோதரருக்கு திருவாரூர் வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் அவசர இரத்த தான சேவையாக
 O POSITIVE 1 unit வழங்கப்பட்டது...
அந்த சகோதரர் பூரண குணமடைய தூஆ செய்யவும்....

அறிவும் அமலும் இபாதத் நிகழ்வுகள் : கிளை-1&2 (16/04/2017)


அறிவும் அமலும் நிகச்சியில் ஒரு பகுதியான பள்ளிவாசலில் தங்கி தஹஜ்ஜத் தொழுகை மற்றும் இன்ன பிற இபாதத்கள் செய்யும் பணி 16-04-2017 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ரயிலடித் தெரு மர்க்கஸில் துவங்கியுள்ளது...

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (16/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-04-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் மேலச்செட்டித் தெருவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் *உலக அதிசயம் எது ?* என்ற தலைப்பில் ஆலிமா உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

திருவாருர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாகன வசதி : கிளை-1 (11/04/2017)


ராஜஸ்தான் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் முதியவருக்கு நீதி கேட்டு..கொலைவெறித்தாண்டவம் ஆடிய காட்டு மிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 11.04.17 அன்று நடைபெற்றது... .
இதில் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ஒரு வேண் வசதி செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (09/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-04-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் மேலச்செட்டித் தெரு பிச்சையப்பா இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி ஃபாத்திமுத்து அவர்கள் *நபிதோழியர்களும் நமது பெண்களும்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

இலவச மோர் பந்தல் : கிளை-1 (05/04/2017)


அல்லாஹ்வின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 05-04-2017 இன்று செட்டித்தெரு பேருந்து நிறுத்தம் அருகில் மோர் பந்தல் ...
பேருந்து ஓட்டுனர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் மோரை பருகினர்....
அல்ஹம்துலில்லாஹ்....
:அடியக்கமங்கலம் கிளை 1

*அவசர இரத்ததான சேவை* : கிளை-2 (04/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4.4.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக கூத்தாநல்லுாரை சார்ந்த சேக்தாவுத் என்ற சகோதரருக்கு O positive இரத்தம் கொடுக்கப்பட்டது

அல் ஹிதாயா அரபி பாட சாலை : கிளை-1


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் இயங்கி வரும் *அல்ஹிதாயா அரபி பாடசாலை* மாணாவர்களின் ஒரு பகுதி.
இளம் வயது முதல் மார்க்கத்தை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் பயிலும் அனைத்து மாணாவ & மாணவிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய தூஆ செய்யவும்...

புத்தகங்கள் & ஸ்டிக்கர்கள் வினியோகம் : கிளை-1 (02/04/2017)


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 02-04-2017 அன்று நடைப்பெற்ற பெண்கள் பயாணில் கீழ்காணும் புத்தகங்கள் & ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது....
1) அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 15 புத்தகங்கள்
2)திருக்குர்ஆனை படியுங்கள் - 25 ஸ்டிக்கர்கள்
அல்ஹம்துலில்லாஹ்...
: TNTJ கிளை 1 அடியக்கமங்கலம்