TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, December 29, 2010

மௌலானா ஒலியுல்லாவின் கொடி இறக்க நிகழ்ச்சியும்! மார்க்க பீரங்கிகளின் சொற்ப்பொழிவு பேச்சும்!!

      நமதூர்  ராஜாத் தெருவில் 27/12/2010 அன்று  இரவு மௌலானா ஒலியுல்லாவின் பக்த கோடிகளால் கொடியிறக்க நிகழ்ச்சியும்,  அதை தொடர்ந்து மார்க்கச் சொற்ப்பொழிவு என்ற பெயரில் ஒரு நாடகமும் அரங்கேறியது. நல்லோர்கள் வழியில் நாம் என்ற தலைப்பில் முதலில் பேசுவதற்காக இருந்த நமதூர் பெரியப் பள்ளி இமாம் பீர் முஹம்மது, கேட்பதற்கு ஆள் இல்லாத காரணத்தால் நமநமத்துப் போனது வெறும் 15 நிமிடத்தில் உரையை முடித்து அமர்ந்துக் கொண்டார் எனபது குறப்பிடத்தக்கது.

Wednesday, December 22, 2010

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி...


கடந்த 19.12.2010 ஞாயிற்று கிழமை மாலை 4.00 மணிக்கு தவ்ஹீத் மர்கசில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நமதூர் ராஜா தெருவில் இருக்கும் தர்காவில், மார்க்கம் என்ற பெயரால் நடக்கும்/ நடக்க இருக்கும் அனாச்சாரங்கள் எப்படி மார்க்கத்திற்கு முரணானவை என்பதைப் பற்றியும், இணை வைப்பாளர்களுக்கு மறுமை வேதனையை பற்றியும் சகோ. இப்ராஹீம் உமரி தெளிவாக விளக்கினார்.        

தர்காவின் பெருவிழா!! இணை வைப்பாளர்களுக்கு திருவிழா!!!



ஜின்னையும்மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர(வேறு எதற்காகவும்) நான்படைக்கவில்லை.
(அல்குர்ஆன் 51 : 56)
அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை படைத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக்கொள்ளலாம்ஆனால் உண்மையான இஸ்லாத்தை பின்பற்றுகின்ற மக்களுக்கு மத்தியில் ஸைத்தானிய அடிச்சுவடுகளை சிறிதும் பிசகாமல் பின்பற்றுகின்ற பரேலவி மதத்தினரால் சமாதி வழிபாடுதாயத்துதகடுகள்போன்ற எண்ணற்ற இணைகற்பிக்கின்ற காரியங்கள் புகுந்து விட்டனஆனால் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாது எடுத்துரைக்கின்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர பிரச்சாரத்தின் காரணத்தினால் சைத்தானிய சக்திகளான கப்ரு வணங்கி பரேலவிகளின் சிலந்திக் கோட்டைகள்  தகர்த்தெறியப்பட்டுள்ளது.

Tuesday, December 21, 2010

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு


சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை,அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரையும் நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுக்கு மாணவர்கள் நன்றாக தயாராகும் வகையில், க்கியப் பாடத் தேர்வுகளுக்கு இடையே போதிய இடைவெளி அளித்து,அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு மாநாட்டில் அடியக்கமங்கலம் சம்மந்தமான தீர்மானகள்...

தீர்மானம்:1   
                              *வளர்ந்துவரும் கலாச்சாரத்தில் ஒழுக்க சீர்கேட்டை நோக்க மாணவ மாணவிகளை அழைத்து செல்வது co-education என்ற ஆண்கள்பெண்கள் இணைந்து படிக்கக் கூடிய  பள்ளிகளாகும்.  எதிர்க்கால கல்வியை கருத்தில் கொண்டு அடியக்கமங்கலத்தில் தனியாக மகளிர் மேல் நிலைப் பள்ளி அமைக்க வேண்டும்.
தீர்மானம்:2   
                               *ரேசன் கார்ட் பதிவு செய்து 60 நாட்களில் கிடைக்க வேண்டியது பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் கிடைக்கப் பெறாத பல குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு விரைவில் கிடைக்க ஆவன செய்யவேண்டும். 
தீர்மானம்:3   
                                *அடியக்கமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நின்றாலும் பேருந்துகள் நிற்காமல் சென்றுவிடுகின்றன. பொதுமக்களின் நேரத்தையும் கருத்தில் கொண்டு  அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் என இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது 

Monday, December 20, 2010

அரசு நலத்திட்டங்களை பயன்படுத்தாத முஸ்லிம்கள் – Video

அரசு நலத்திட்டங்களை பயன்படுத்தாத முஸ்லிம்கள்


To Download Video Click Here (Right Click Save link As)

Sunday, December 19, 2010

ரேஷன் கார்டுகள் மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு...


இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் 2011 டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் கார்டுகளில் கூடுதல் தாள்கள்  இணைக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.தமிழகத்தில் தற்போது 1.94 கோடி ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த 2005ம் ஆண்டு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு கால அவகாசம் 2009ம் ஆண்டுடன்  முடிவடைந்தது. போலி ரேஷன் கார்டுகளை களைவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடந்த அரசு திட்டமிட்டது. அதனால்இ புழக்கத்தில் இருக்கும் ரேஷன் கார்டுகளில் இருந்த கூடுதல் தாள்கள் மூலம் 2010 டிசம்பர் 31ம் தேதி வரை செல்லத்தக்க வகையில் நீட்டிக்கப்பட்டது.

ஆனால் ரேஷன் கார்டுகளில் தாள்கள் தீர்ந்து விடும் நிலையில் இருந்தது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ‘‘இப்போதுள்ள ரேஷன் கார்டு அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை புழக்கத்தில் இருக்கும். அதற்காக ரேஷன் கார்டுகளில் கூடுதல் தாள்கள் இணைக்கப்படும்’’ என்று கடந்த வாரம் உணவு கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ஸ்வரண்சிங் அறிவித்தார்.

இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிப்பதற்காக ஏற்கனவே ஓராண்டு செல்லத்தக்க வகையில் நீட்டித்தோம்.  கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் சுமார் 15 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் காரணமாகஇ தற்போது ரேஷன் கார்டுகளை இன்னும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளோம். அதற்காக அந்த ரேஷன் கார்டுகளின் பின்பக்கத்தில் கூடுதல் தாள்கள் இணைக்கப்பட உள்ளன. இப்பணிகள் நாளை முதல் தொடங்குகிறது. 30ம் தேதிக்குள் அனைத்து கார்டுகளிலும் தாள்கள் இணைக்கப்படும். பொதுமக்கள் தாங்கள் பொருள்கள் வாங்கும் கடைகளில் ரேஷன் கார்டை கொடுத்து கூடுதல் தாள்களை இணைத்துக் கொள்ளலாம்’’ என்றார்.

நன்றி : தினகரன்

Saturday, December 18, 2010

U.A.E-யில் பணிகள் சிறக்க பிரார்த்தியுங்கள்...

நேற்று 18 டிசம்பர் 2010 ,மாலை 7 மணி அளவில், தேற, துபாயில் அடியற்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பணிகளை பற்றியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் தொழுகைக்காக இமாம் அமைப்பதற்கான செலவினங்கள் பற்றியும் தொடர் சாந்த வசூலிப்பது பற்றிய விவரங்களயும், மற்றும் ஜனவரி 27 பாபர் மஸ்ஜித் தீர்ப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கான அடியற்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதிற்காக ஆகும் செலவீனங்களுக்கு துபாயில் இருந்து நன்கொடை வசுலிப்பதின் விவரங்களை அடியற்கை தவ்ஹீத் சகோதரர்கள் சகோ. மைதீன் & அமீர் இருவரும் கலந்து ஆலோசித்து வசுலிப்பதற்கான வேலைகளை விரைவில் தொடங்க முடிவெடுத்துள்ளனர். U.A.E-யில் பணிகள் சிறக்க பிரார்த்தியுங்கள்...

U.A.E -லிருந்து அமீர்

Wednesday, December 15, 2010

திருவாரூரில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு மாநாட்டுத் துளிகள்

திருவாரூரில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு மாநாட்டில் மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய திருவாரூர் தெற்கு வீதி.............

மாநாட்டுத் துளிகளை காண இங்கே click செய்யவும்.

Tuesday, December 14, 2010

திருவாரூர் மாநாடு மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பி.ஜே அளித்த பேட்டி – Sun News Video

நேற்று ( 12-12-2010) நடந்த திருவாரூர் மாநாடு பற்றியும் பத்திரிக்கையாளர்களுக்கு பி.ஜே அவர்கள் அளித்த பேட்டியும் Sun News தொலைக்காட்சியில் இன்று (13-12-2010) வெளிவந்துள்ளது.

To Download Video Click here (Right and Save link as)

Sunday, December 12, 2010

அழைப்புப் பனி....

டிசம்பர் 12 இல் திருவாரூரில் நடக்க இருக்கும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு சம்மந்தமாக அடியக்கமங்கலத்தில் அழைப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ள சகோதரர்கள்......

Friday, December 10, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் அநியாயமும் ஜனவரி 27 போராட்டத்தின் அவசியமும் – வீடியோ

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் அநியாயமும் ஜனவரி 27 போராட்டத்தின் அவசியமும் – வீடியோ


வீடியோவை download செய்ய click செய்யவும்.

சமையல் எரிவாயு (gas) பயன்படுத்துவோர் கவனத்திற்கு....

இன்டேன் நிறுவன தகவல் தொடர்பு போது மேலாளர் பிளாரன்ஸ் அவர்கள் சிலிண்டர் பதிவு செய்வது தொடர்பாக தினகரன் பத்திரிகை மூலம் விளியிட்ட அறிவிப்பு......

சிலிண்டரை உடனுக்குடன் பதிவு செய்து பெற்றுக்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் இன்டேன் நிறுவனம் செய்கிறது . 21 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற முறை எப்போதும் இருந்ததில்லை தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதலாக பாட்டிலிங் பிளான்ட் தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் முறையாக பதிவு செய்து வெய்ட்டிங் லிஸ்ட் நம்பரை அவ்வப்போது சரி செய்து சிலிண்டரை கேட்டுப்பெற வேண்டும்.

சில வாடிக்கையாளர்கள் ஏஜென்சியிடம் அதிகப் பணம் கொடுத்து சிலிண்டர் பெறுவதால் முறைக் கேடு தொடர்கிறது. ஏஜென்சி அடாவடியில் ஈடுப்பட்டாலோ பிளாக்கில் சிலிண்டர் விற்பனை செய்தாலோ இண்டேனுக்கு தொரியப்படுத்தவும். ஏஜென்சி மீதான புகார்களை 044 -24339236, 044- 24339246, ஆகிய தொலைப்பேசி எங்களில் தெரிவிக்கலாம். கடிதம் மூலம் அனுப்பப்படும் புகார்களையும் உடனே பரிசீலிக்கிறோம். புகார்கள் உறுதி செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்றி: தினக்கரன் 09/11/2010

ஆஷுரா தினம்....


“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்"! (அல்குர்ஆன் 9:36)

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத் திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன.

நபி மூஸா(அலை) அவர்கள், அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிபெற்று கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட தினமான ஆஷுரா தினத்தை ஒரு சாரார் களங்கப்படுத்தி அதை துக்கமிக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

அலீ(ரலி) அவர்களை தூதராக ஏற்றுக் கொண்ட ஷியா கூட்டத்தினர், அலீ(ரலி) அவர்களின் மகனார் ஹூஸைன்(ரலி) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளில் கொல்லப்பட்டார்கள் என்றும், அதற்காக துக்கம் அனுஷ்டிப்பதாகக் கூறி நெஞ்சில் அடித்துக் கொள்வது, ஒப்பாரி வைப்பது, ஊர்வலம் நடத்துவது, தீக்குண்டத்தை வலம் வருவது என்பன போன்ற வீணான காரியங்களை இஸ்லாத்தின் பெயரால் செய்து வருகின்றனர்.இவ்வாறு செய்வது பெரிய பாவமாகும். அது மட்டுமின்றி, எந்த ஒரு முஸ்லிமும் இப்படிச் செய்யக்கூடாது.
இது போன்று செய்தால் அவன் முஸ்லிம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்... “கன்னத்தில் அடித்துக் கொண்டு, சட்டையைக் கிழித்துக்கொண்டு, அறியாமைக் காலத்து ஒப்பாரி வைப்பவன் என்னைச் சார்ந்தவனில்லை. அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1294, முஸ்லிம் 148, திர்மிதி 920, நஸயி 1827

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால்,துக்கம் என்ற பெயரில் மார்பில் அடித்துக் கொள்ளும் இந்த ஷியாக் கூட்டத்தினரின் செயலை சிலர் முஸ்லிம்கள் பெரிய சாதனையை செய்து விட்டதைப்போல் ரசிக்கின்றனர். அங்கே ஒன்று கூடுகின்றனர். ஆனால் இது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தை யார் செய்தாலும் அதை தடுக்க வேண்டும். அதற்கு சக்தியில்லையென்றால் இஸ்லாத்திற்கே கேவலம் ஏற்படுத்தும் இவர்களின் காரியங்களை பார்த்து வேதனைப்பட்டு ஒதுங்கி விட வேண்டும்.

ஏனெனில்,
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...(கவலையின் போது) ஒப்பாரி வைப்பவனையும், தலையைமழித்துக் கொள்பவனையும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டு விலகிக் கொண்டேன் அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: முஸ்லிம் 149

இவர்கள்தான் இப்படியென்றால், தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் சிலரது காரியங்கள் இன்னும் படுமோசமாக இருக்கிறது. முஹர்ரம் பத்தாம் நாள் வந்த உடனேயே பஞ்சா எடுப்பது (ஐந்து விரல்களில் படும் அளவிற்கு மஞ்சளைக் கையால் தட்டி வீட்டுக் கதவுகளில் அப்புவது), ஹுஸைனார் பெயரில் மவ்லித் ஓதுவது, பத்தாம் நாளில் மட்டும் நோன்பு நோற்று யூதர்கள் வழியைப் பின்பற்றுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதுவெல்லாம் நபிகளாரின் வழிமுறைகளல்ல. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ ஸஹாபாக்கள் ஷஹீதானார்கள். ஸஹாபியப் பெண்கள் இறந்துள்ளார்கள். இவ்வளவு ஏன்? நபி(ஸல்) அவர்களுடைய பாசத்துக்குரிய மனைவி கதீஜா(ரலி) அவர்களும் இறந்துள்ளார்கள். இதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்தார்களா? நெஞ்சில் அடித்துக் கொண்டார்களா? சட்டையைக் கிழித்துக் கொண்டார்களா? தீக்குண்டத்தை சுற்றி வந்தார்களா? மொட்டையடித்துக் கொண்டார்களா? ஹுஸைனார் மவ்லித் ஒதினார்களா? இல்லவே இல்லை. நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டாத தடுத்துள்ள இந்த அனாச்சாரங்களை நாம் ஏன் செய்ய வேண்டும். இதனால் நன்மை கிடைக்குமென்றா? இல்லையே!. இது போன்ற காரியங்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள் என்றே நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புதிய அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் (தள்ளி) விடும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயி 1560

மேலும் ஆஷுரா தினம் என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எப்படி சிறப்பு தினமாக கருதப்பட்டு வந்தது என்பதையும் விளங்க வேண்டும். ஏனெனில் சிறப்பு என்று எண்ணி நம் சமுதாயத்தினர் தவறான காரியங்களை செய்து வருகின்றனர்.முஹர்ரம் பத்தில் மேற்கூறிய காரியங்களை செய்யாமல் நபி (ஸல்)அவர்கள் நோன்பு நோற்குமாறு கற்றுத் தந்துள்ளார்கள்

“ரமளான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 1962

“ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம் 1977

“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்தபோது ஆஷுரா தினத்தில் வேதக்காரர்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்போது வேதக்காரர்கள், இன்றைய தினம் மகத்துவமிக்கதாகும். அல்லாஹ் நபி மூஸா(அலை) அவர்களை காப்பாற்றி ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலில் மூழ்கடித்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக நபி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இவர்களைவிட நாம்தான் மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறி ஆஷ{ரா தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோற்குமாறு கட்டளையிட்டார்கள் அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்: புஹாரி 3145

“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்த போது எங்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது நபி மூஸா(அலை) அவர்கள் வெற்றி பெற்ற தினமாக இருப்பதால்) யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்தும் தினமாயிற்றே என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டில் முஹர்ரம் 9ம் நாளிலும் நோற்போம் என்று கூறினார்கள் அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத் 2087

ஆகவே, மேற்காணும் விஷயங்களை நன்கறிந்து புனிதமிக்க ஆஷுரா தினத்தைக் கண்ணியமாகக் கருதி முஹர்ரம் 9-10ல் நோன்பு நோற்று நன்மைகளை பெறுவோம். அது மட்டுமல்லாமல் தேவையில்லாத, மார்க்கம் காட்டித் தராத காரியங்களை செய்வதிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தினர்களையும் பாதுகாத்துக் கொள்வோம்!

Tuesday, December 7, 2010

முஹர்ரம் பிறை அறிவிப்பு



தமிழகத்தில் இன்று மதுரை, நெல்லிகுப்பம் தஞ்சை போன்ற பல இடங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று முதல் முஹர்ரம் மாதம் ஆரம்பமாகின்றது. எனவே இன்று (7-11-2010) தமிழகத்தில் முஹர்ரம் பிறை -1 என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வருகின்றது 15 மற்றும் 16 ஆம் தேதி முஹர்ரம் பிறை 9 மற்றும் 10 ஆக இருப்பதால் அன்றய இரு தினங்களில் ஆசுரா நோன்பு வைப்பது நபி வழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-TNTJ தலைமையகம்

ட்ரஸ்ட்/ ஜமாஅத் வேறுபாடு



நமது ஊரில் ட்ரஸ்ட் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் இரண்டு செயல்படுகிறதே ட்ரஸ்ட்டாக செயல்படுவதற்கும் ஜமாத்தாக செயல்படுவதற்கும் என்ன வேறுபாடு
என்று சில சகோதரர்கள் கேட்கின்றனர்

இதுதான் அடிப்படை வேறுபாடு


ட்ரஸ்ட் என்பது குறிப்பிட்ட ட்ரஸ்டிகளைக் கொண்டு அமைக்கப்படும். பத்து பேர் அல்லது பதினைந்து பேர் கொண்ட ட்ரஸ்டை அமைத்துக் கொண்டால் அதற்கு அவர்கள் மட்டுமே உரிமை படைத்தவர்கள். ட்ரஸ்டிகளாக இல்லாதவர்கள் அதற்கு என்ன தான் உதவி செய்தாலும் அந்த ட்ரஸ்டில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ட்ரஸ்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது என்றாலும் குறைப்பது என்றாலும் அந்தப் பத்துப் பேர் ஒன்று கூடி மெஜாரிட்டி அடிப்படையில் சிலரைச் சேர்க்கலாம். அல்லது நீக்கலாம். உறுப்பினர் சந்தா செலுத்தி யார் வேண்டுமானாலும் அதில் உறுப்பினராக முடியாது. உறுப்பினர் அட்டை எல்லாம் கொடுக்க முடியாது. ட்ரஸ்டிகளில் ஒருவர் என்று சேர்க்கப்பட்டால் தான் அதில் உரிமை கொண்டாட முடியும்.


கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தாலும் அது குறித்த முடிவை அந்தப் பத்து பேர் தான் எடுக்க முடியும். மற்ற யாரும் தலையிட முடியாது.


ட்ரஸ்ட் என்றால் ட்ரஸ்டிகள் மட்டுமே அதன் உறுப்பினர்கள். அதாவது உறுப்பினர்களும் நிர்வாகிகளும் அவர்கள் மட்டுமே.


ஆனால் ஜமாத்தாக பதிவு செய்யப்பட்டால் அதன் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் தான் நிர்வாகிகள். அதாவது நிர்வாகிகள் அல்லாத உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்கள் தான் நிர்வாகிகளைத் தேர்வு செய்பவர்களாக இருப்பார்கள்.


உதாரணமாக ஒரு ஜமாத்தின் தலைவராக இருப்பவர் குற்றம் செய்து விட்டார் என்றால் அவரை ஜமாத்தின் பொதுக் குழுவைக் கூட்டி நீக்க முடியும்.


ஆனால் ஒரு ட்ரஸ்டின் தலைவராக இருப்பவர் குற்றம் செய்து அவரை நீக்க மக்கள் விரும்பினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பத்து ட்ரஸ்டிகளில் ஆறு பேர் அவரை நீக்க முடியாது என்று கூறி விட்டால் அவரை யாராலும் நீக்க முடியாது.


ஜமாத்துக்கு கிளை, மாவட்டம், மாநிலம் என்று பல மட்டங்கள் இருக்கும். ட்ரஸ்டுக்கு ஒரே மட்டம் தான் இருக்கும். அந்த பத்து பேருக்குள் அவர்கள் செயல்பட்டுக் கொள்ளலாம்.

இந்த ஆண்டு TNTJ டிசம்பர் 6 போராட்டம் நடத்தாதது ஏன்?

விளக்கம் பி.ஜே


வீடியோவை download செய்ய click செய்யவும்

Monday, December 6, 2010

மாற்று மத சகோதருக்கு குர்ஆண் வழங்கப்பட்டது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை சார்பில் இஸ்லாமிய மார்க்கத்தை எத்திவைக்கும் முகமாக மாற்று மத சகோதருக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது இதை மாணவரணி செயலாளர் சகோ. முஹம்மது ஹாரீஸ் அவர்கள் வழங்கினார்

தொடர் மழை




தொடர்ந்து பெய்ந்து வரும் தொடர் மழையின் காரணமாக அடியர்க்கையில் பல தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது இதனால் பலமாக(?) போடப்பட்டுள்ள தெருக்களின் சாலைகள் மிகவும் சேதமாகி போக்கு வரத்திற்கு இடையுறாக இருக்கின்றன.

தெருமுனை பிரச்சாரம்


கடந்த 23/11/2010 அன்று அடியக்கமங்கலத்தில் டிசம்பர் 14 திருவாரூரில் நடக்க இருக்கும் சமுதாய விழிப்புணர்வு சம்மந்தமாக நடைப்பெற்ற

தெருமுனை பிரச்சாரம்

Thursday, December 2, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டம் தேதி மாற்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4 ல்அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


Wednesday, December 1, 2010

திருவாரூரில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு மாநாட்டுத் துளிகள்.......