TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, January 23, 2011

ஜனவரி 27 பேரணி & ஆர்ப்பாட்டம்



பாபர் மசூதி வழக்கில் மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட சட்ட வீரோத தீர்ப்பைக் கண்டித்தும்,வழக்கை தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் மறு விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தியும்.

தமிழக முஸ்லிம்களின் மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

அடியற்க்கையில் இருந்து ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்துக் கொண்டனர்.


Monday, January 10, 2011

கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளையில், 09/01/2011 ஞாயிற்று கிழமை மாலை 4.00 மணிக்கு மாணவ மாணவியர்களுக்கான கல்வி வலி காட்டல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ. சர்வத் கான் MBBS அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.    

Thursday, January 6, 2011

சுவர் விளம்பரம்.....

இன்ஷா அல்லாஹ், ஜனவரி 27 யில் சென்னை & மதுரையில் நடக்க இருக்கும் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அடியக்கமங்கலம் கிளையில் சுமார் 11 இடங்களில் சுவர் விளம்பரம் வரையப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, January 5, 2011

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி???


தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும்,அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது...

Monday, January 3, 2011

செயற்க்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளையில் 02/01/2011 அன்று இரவு 7.45 மணியளவில், மாவட்ட துணை செயலாளர் சகோ.இஸ்மத் பாச்சா  தலைமையில் கிளை செயற்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த சகோ.அமானுல்லா வெளியூருக்கு சென்ற காரணத்தால், தற்போதைய துணைத் தலைவராக சகோ.சபாயத்துல்லா(9789429964) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.