TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, June 26, 2011

பெண்கள் பயான்



26-06-2011 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பெண்கள் பயாண் நடைப்பெற்றது.இந்த பயாணில் ஆலிமா அவர்கள் "ஈமானில் உருதி "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Sunday, June 19, 2011

கேள்வி? பதில்!


கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள்?



பதில் :நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை

இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.
ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமே அதிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும் போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.
இது மார்க்க ரீதியான காரணம்.
இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம் என்பதற்காக இறைவன் இதைத் தடுத்திருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும் போதுங ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.மீன்களில் அந்த நிலைமை கிடையாது.
 ஆசிரியர் : P.ஜைனுல் ஆபிதீன்
நூலின் பெயர்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்







Tuesday, June 14, 2011

அடியக்மங்கலத்தில் நடைப்பெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் பரிசுஅளிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


12-06-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்...
இந்நிகழ்ச்சியை வெங்கலம் A.அப்துல் காதர்,(திருவாரூர் மாவட்ட TNTJ  துணை தலைவர்) அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்கள்.





அதன் பின் கோடைக்கால பயிற்சி முகாமில் பயின்ற மாணவ & மாணவிகள் துஆ மனனம், சூராக்கள் மனனம், பயான்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். 


மேலும் D.செய்யது அஹமது அவர்கள்,"கல்வி எங்கே?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

Wednesday, June 8, 2011

அடியக்கமங்கலத்தில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


Monday, June 6, 2011

கனிணி பயிற்சி




மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாமில் நாம் அறிவித்தது போல் கனிணி பயிற்சி 05-06-11 நேற்று நடைப்பெற்றது.இந்த வகுப்பில் மாணவர்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தார்கள். 

Sunday, June 5, 2011

மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவுப்பெற்றது











  மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் 02-06-11 வியாழன் கிழமை நிறைவுப்பெற்றது.
இந்த இருதி வகுப்பில் உளூ பயிற்சி, தொழுகை பயிற்சி செய்முறை விளக்கத்துடன் நடைபெற்றுது.
பின்னர் இருதி தேர்வு நடைப்பெற்றது.இந்த தேர்வில் அதிக மதிபெண் பெரும் முதல் மூன்று மாணவர்களுக்கு வரும் 12-06-2011 பொதுக்கூட்டதில் பரிசுகள் வழங்கபடும் என்று அறிவிக்கபட்டது.

Wednesday, June 1, 2011

மாணவர்கள் அரசின் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவங்கள்

அரசின் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவங்கள்


(10,12 ஆம் வகுப்பு  மற்றம் கல்லுரி பயில்பவர்களுக்கு)


கல்லூரி மாணவர்களுக்கு




12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு


பி.யி, எம்பிபிஎஸ், பிஎல், சிஏ, படிக்கும் மாணவர்களுக்கு