TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, August 31, 2011

நோன்பு பெருநாள் தொழுகை-2011

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-8-2011 அன்று சிறப்பாக நோன்பு பெருநாள் தொழுகை 7:45 மணியளவில் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் நடைப்பெற்றது.ஏராளமான ஆண்களும்,பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.










இமாம் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.

நோட்டிஸ் விநயோகம்


நோன்பு பெருநாள் ஒழுங்கு முறைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் ஊர் முழுவதும் 30-08-2011 அன்று நோட்டிஸ் கொடுக்கப்பட்டது.

பித்ரா விநயோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம்-கிளை சார்பாக சீனிவாசபுரம், கிடாரம்கொண்டான்,சித்தநல்லூர்,அடியக்கமங்கலம் முழுவதும் ஏழைகளை தேடி நேரில் 300  பித்ரா பைகள் 30-08-2011 அன்று வழங்கப்பட்டது.பெருநாளை அவர்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்க்காக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.






பைகளில் வைக்கப்பட்ட உணவு பொருட்கள்.



ஒற்றைபடை-29


அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 29-08-2011 அன்று இரவு சரியாக 10:00 மணியளவில் இஷா தொழுகையும் 10:30 மணியளவில் இரவு தொழுகையும் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து இமாம் உரைநிகழ்த்தினார்கள்.

Monday, August 29, 2011

சுமையான கேள்விக்கு(?) சமையான பதில்(!) அடியற்க்கை சுமையாவில்...

அடியக்கமங்கலம் சுமையா அறக்கட்டளையில் இரவு தொழுகையில் இமாம் அவர்கள் கையில் குர் ஆனை வைத்து பார்த்து ஒதுகின்றார்.இதை தவறு என்று நம் ஜமாஅத் சகோதரர்கள் பலமுறை எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.இதற்கு ஆதாரம் கேட்டாள் "அந்த இமாம் சொன்னார் இந்த இமாம் சொன்னார்" என்று சமாளிக்கின்றனர்.



ஆனால் இரவு தொழுகையின் போது அந்த பள்ளியின் பெண்கள் பகுதியில் இருந்து இந்த கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பேச்சாளர் அவர்கள் தாராளமாக ஓதாலாம் என்று கூறிவிட்டார்.

பெண்கள் மீண்டும் "அவ்வாறு ஓதினால் சுன்னத் விடபடுகின்றதே" என்று கூறியவுடன் பேச்சாளர் அவர்கள் சமாளிக்க ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறிய சமையான பதில்...

(1)இரண்டு கை இல்லாதவர்கள் சுன்னத்தை விட்டு விட்டு தான் தொழுகிறார்.


(2)நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சஹாபி பெண்கள் தங்களது குழந்தைகளை தூக்கி மடியில் வைத்து தான் தொழுதார்கள்.


(3நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்யும் போது ஒரு கையில் கடிவாளத்தை பிடித்து கொண்டு தொழுதுள்ளார்கள்.

என்று உலகில் யாரும் கூறிராத ஒரு பதிலை கொடுத்துள்ளார் .

 பெண்கள் கேட்ட கேள்வி என்ன என்பதை முற்றிலும் மறந்து தன்னுடை மடமையை வெளிபடுத்தி உள்ளார் இந்த பேச்சாளர் .

அவர் சொன்ன பதிலை சற்று சிந்தித்தால் அவர் சொன்னது தவறு என்பதை எளிதாக நாம் அறிந்து கொள்ளலாம்.

முதல் கேள்வி-கை இல்லாதவர் அவ்வாறு தான் தொழ முடியும் அவருக்கு கை இருந்தால் தான் அவருக்கு அது சுன்னத்தை விட்டதாக ஆகுமே தவிர கை இல்லாத காரணத்தால் அவருக்கு அதில் எந்த ஒரு தவறும் ஆகாது.

இராண்டாம் கேள்வி-சஹாபி பெண்கள் சிலர்  தங்களது குழந்தைகளை தூக்கி மடியில் வைத்து தொழுது உள்ளனர்.இது அவர்களுக்கு கொடுக்க பட்ட சலுகையாகும்.ஏன் என்றால் அவர்கள் வீட்டை சுத்தபடுத்த வேண்டும், கணவனை கவனிக்க வேண்டும்,தன் குழந்தையை கவனிக்க வேணடும் இந்த இக்கட்டான சூழ் நிலையில் தொழுவது அவர்களுக்கு மிக சிரமமானது.ஆகையால் நபி (ஸல்) இந்த செயலை தடுக்கவில்லை.

மூன்றாம் கேள்வி-நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்யும் போது ஒரு கையில் கடிவாளத்தை பிடித்து கொண்டு தொழுதுள்ளார்கள் என்பது உண்மை தான்.

அவர்கள் பயணத்தில் உள்ளார்கள்.பயணத்தின் போது தொழுவது அந்த காலத்தில் மிகவும் சிரமமாக தான் இருந்தது.இந்த காலகட்டத்தில் வேண்டும் ஆனால் எளிதாக இருக்கலாம்.ஆனால் அன்றைய காலத்தில் உளூ செய்ய தண்ணிர் கிடைக்காது,தொழுவதற்க்கு இடம் கிடைக்காது.ஆகையால் அவர்கள்  ஒட்டகத்தின் மீது அமர்ந்த படியே தொழுதுள்ளார்கள்.தனது கடிவாளத்தை விட்டு விட்டால் ஒட்டகம் வழிதவறி போக நெறிடும்.

பயணத்தின் போது ஃபர்ள் 2 ரக்காயத்துகள் தொழுதால் போதும் என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ஆகையால் நாம் இதை ஆதாரமாக கொண்டு இனி ஃபர்ளை 2 ஆக தொழுதால் போதும் என்று சொல்ல முடியுமா.

இவர்கள் கூறிய பதில் சிறிதாவது நாம் கேட்ட கேள்விக்கு சம்மந்தம் இருக்கிறதா.

இங்கு தொழுகை வைக்க கூடிய இமாமுக்கு கை இல்லையா?


அல்லது குழந்தையை மடியில் வைத்து தொழுகிறாரா?


அல்லது ஒட்டகத்தின் மேல் அமர்ந்து தொழுகை நடத்துகிறாரா?

இதில் எதையும் அவர் செய்யவில்லை.அவர்கள் கூறிய மூன்று பதில்களுமே சூழ்நிலையை,நிர்பந்தத்தை தருகின்றது.

ஆனால் இவருக்கு எந்த ஒரு சூழ்நிலையும் ஏற்படவில்லை.இவ்வாறு தொழ கூடாது என்று நன்கு அறிந்தும் இவ்வாறு செய்து வருகின்றனர்.தெரிந்ததை ஓதி தொழுகையை முடிக்காமல் இது போல் காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவறு என்று பேச்சாளருக்கு நன்றாகவே தெரியும் ஆனால் தவறு என்று கூறிவிட்டால் பயாண் பேசவிடமாட்டார்கள்,அடித்து துறத்திவிடுவார்கள் என்று அஞ்சி சமாளித்துள்ளார் இந்த மேய்பாளர்...

இவர்களின் உண்மையான கொள்கை சொத்தை சேர்த்து தங்களது பெயரில் வைத்து கொள்வது தான்.ஆனால் வெளியில் ஏகத்துவ வாதிகள் போல் காட்டி கொள்வார்கள்.நாங்கள் தான் தவ்ஹீத் என்று பெருமை அடிப்பார்கள்.

இவர்கள் போலி தவ்ஹீத்வாதிகள்...இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்...

Sunday, August 28, 2011

ஒற்றைபடை-27


அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 27-08-2011 அன்று இரவு சரியாக 10:00 மணியளவில் இஷா தொழுகையும் 10:30 மணியளவில் இரவு தொழுகையும் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து இமாம் உரைநிகழ்த்தினார்கள்.


அதன் பின் சகோ.அமானுல்லா அவர்கள் வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தினார்.

Saturday, August 27, 2011

ஒற்றபடை-25


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-08-2011 அன்று இரவு சரியாக 10:00 மணியளவில் இஷா தொழுகையும் 10:30 மணியளவில் இரவு தொழுகையும் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து இரண்டு ஆலிமாக்கல் உரைநிகழ்த்தினார்கள்.பின் வினாடி-வினா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Thursday, August 25, 2011

அறிவுகெட்ட அறிஞர்யின் செயல்

தொழுகையில் குர்ஆனை கையில் வைத்து பார்த்து ஒதாலாமா?


"நாங்களும் தவ்ஹீத் ஜமாஅத் தான்" என்று மக்களை ஏமாற்றி வசூல் வேட்டை செய்துவரும் சிலர் இது போல் தங்களது ஜமாத் தொழுகையில் கையில் குர்ஆனை வைத்து ஒதுகின்றனர்.பிறகு ருகூவு செய்யும் போது குர்ஆனை அருகில் வைத்து கொள்ளுகின்றனர்.மீண்டும் அடுத்த ரக்கயத்துக்கு எழுந்து குர்ஆனை விரித்து பக்கங்களை பிரட்டி பார்த்து ஒதி வருகின்றனர்.இவ்வளவு செயல்களையும் தனது தொழுகையில் செய்து வருகின்றனர்.

ஆனால் இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்...

"ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஒதுங்கள்".
(வசன சுருக்கம்)
திரு குர்ஆன்-73:20

நபி (ஸல்) கூறினார்கள்...

"நபி (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது முன் கைஇடது மணிக்கட்டுஇடது குடங்கை ஆகியவற்றின் மீது வைத்தார்கள்".

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: நஸயீ 879



 "நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற போது... தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன்".

    1.            

    1. அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

    1. நூல்: அபூதாவூத் 624

      நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தறாத இந்த வழிமுறை இவர்கள் செய்து வருகின்றனர்.இவர்கள் இவ்வாரு தொழுவதற்க்கு காரணம் பெருமை தான் .

      இவருக்கு பின்னால் தொழுவும் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் கையில் வைத்து ஒதுவது தெரியாமல் "ஆஹா என்ன ஒரு ராகம்" என்றும் "குர்ஆனை அப்படியே ஒதுக்கின்றார்" என்றும் வசனம் பாடி வருகின்றனர்.ஆனால் மக்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தால் "தூ" என்று துப்புவார்களே தவிர அறிஞர் என்று புகழமாட்டார்கள்.


    தங்களை அறிஞர் என்று சொல்ல வக்கு இல்லாதவர்கள் இன்று நானும் அறிஞர் என்று பெருமை அடித்து கொள்கின்றனர்.


    நீங்கள் உண்மையில் அறிஞர் தான் ஆனால் மார்க்கம் அறியாத அறிவுகெட்ட அறிஞர்...

Wednesday, August 24, 2011

ஒற்றைபடை-23



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-08-11  செவ்வாய் கிழமை இரவு சரியாக 10:00 மணியளவில் இஷா தொழுகையும்,10:30 மணியளவில்
இரவு தொழுகையும் நடைபெற்றது.அதன் பிறகு சிறப்பு பயாண் நடைப்பெற்றது.

Tuesday, August 23, 2011

ஒற்றைபடை-21


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-08-11  ஞாயிற்று கிழமை இரவு சரியாக 10:00 மணியளவில் இஷா தொழுகையும்,10:30 மணியளவில்
இரவு தொழுகையும் நடைபெற்றது.அதன் பிறகு சிறப்பு பயாண் நடைப்பெற்றது.அதன் பின் ஆலிமா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.நமது மர்க்கஸ் சார்பாக தொழுகையில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்ப்பட்டோருக்கு சஹர் உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டது.

மக்களே உஷார்


ரமலான் மாதம் வந்துவிட்டால் ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் மிஸ்கீன் என்ற பெயரில் வலம் வருகின்றனர்.உண்மையில் இவர்கள் யார்? இவர்களை ஏழைகள் என்று வைத்துக்கொண்டாலும் இவர்கள் அனைவரும் முஸ்லிம்களா! என்று பார்த்தால் இல்லை.இதில் வரக்கூடிய கால்வாசி பேர்தான் முஸ்லிம்களாக இருக்கின்றனர்.மற்றவர்கள் எல்லாம் முஸ்லீம்களை போல வேஷம் போட்டுக் கொண்டு நம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.இவர்கள் உடுத்த உடையில்லை என்றும் உண்ண உணவில்லை என்றும் நம் மக்களிடம் கூறி உடையையும்,உணவையும் வாங்கிச் செல்கின்றனர்.இதே போல் இன்னொரு வீட்டிற்கும் சென்று இதையே கூறுகின்றனர்.அதை விட சிறந்த உணவோ,சிறந்த ஆடையோ கிடைத்தால் முன்னர் வாங்கிய ஆடையை வீதியில் வீசிவிட்டு செல்கின்றனர்.

இதோ ராஜாத் தெருவில் பொது இடத்தில் குப்பை போல் கிடக்கும் உங்கள் தர்மம்.

நாம் சொல்வது என்னவென்றால் இவர்களுக்கு காசாக கொடுத்துவிட்டால் கூட அதை வாங்கி சென்று செலவி செய்கின்றனர்.ஆனால் நமது ஆடைகளை இவர்களுக்கு கொடுத்து வீணடிக்க வேண்டாம்.இந்த ஆடைக்கூட இல்லாமல் எத்தனையோ ஏழைகள் வாழ்ந்து வருகின்றனர்.அவர்களை தேடிச் சென்று கொடுத்து உங்களின் தர்மங்களை பயனுள்ளதாக அமைத்து கொள்ளவும்.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன.

அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார்.

அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்!

மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள்.


நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல் குர்ஆன்-2:73

இவ்வாறு உள்ளவர்களுக்கு தர்மங்கள் உரித்தானதாகும்.ஆனால் நாமோ தவறான மக்களிடம் தர்மங்களை வழங்கி ஏமாந்துக் கொண்டிருக்கிறோம்.இனியாவது திருமறையின் வழிகாட்டுதல்படி உரியவர்களிடம் தர்மங்களை ஒப்படைத்து மறுமையில் வெற்றிப் பெறுவோமாக!!!


Monday, August 15, 2011

முஸாஃபஹா கைகுலுக்குதல்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கை குலுக்குவதும் நபிவழியாகும்.



'ஏமன் வாசிகள் வந்துள்ளனர். முஸாஃபஹா மூலம் முதன் முதலில் நமக்கு முகமன் கூறியவர்கள் அவர்களே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் 4537

ஏமன் மக்களின் முஸாஃபஹா செய்யும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன் மூலம் அங்கீகாரம் செய்கின்றனர். கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் உள்ளிட்ட மூன்று தோழர்கள் தபூக் போரில் பங்கெடுக்கத் தவறியதால் அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில நாட்கள் சமூகப் புறக்கணிப்பு செய்திருந்தனர். பின்னர் அம்மூவரும் மன்னிக்கப்பட்டதாக அல்லாஹ் ஒரு வசனத்தை அருளிய பின் கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் பள்ளிக்குச் சென்றனர். அது பற்றி அவர்கள் குறிப்பிடும் போது நான் பள்ளிவாசலில் நுழைந்தேன். அங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தனர். தல்ஹா (ரலி) அவர்கள் உடனே என்னை நோக்கி வந்து என்னிடம் முஸாஃபஹா செய்து நல்வாழ்த்து தெரிவித்தார் என்று குறிப்பிடுகிறார்கள். 
நூல் : புகாரி 4418, 


நான் சில பெண்களுடன் சேர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) எடுக்கச் சென்றேன். அப்போது அவர்கள் 'உங்களுக்கு இயன்றவரை சக்திக்கு ஏற்றவரை நிறைவேற்றுங்கள்' என்று குறிப்பிட்டார்கள். 'பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன்' எனவும் கூறினார்கள்.
நூல் : இப்னுமாஜா 2865

'பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து ஆண்களிடம் முஸாஃபஹா செய்பவர்களாக இருந்தனர் என்பதை விளங்க முடியும்

ஆண்கள், ஆண்களுக்கும் பெண்கள் பெண்களுக்கும் முஸாஃபஹா செய்வது நபிவழியில் உள்ளதாகும்.

முஸாஃபஹா செய்யும் சரியான முறையையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்கள் பலர் முஸாஃபஹாச் செய்யும் போது தமது இரு கைகளால் மற்றவரின் இரு கைகளைப் பிடிக்கின்றனர். வேறு சிலர் இவ்வாறு முஸாஃபஹாச் செய்யும் போது மற்றவரின் இடது கை கட்டை விரலை அழுத்திப் பார்க்கின்றனர்.

கில்று என்பவர் இன்னும் உயிரோடு உள்ளார், அவருக்கு இடது கை கட்டை விரலில் எலும்பு இருக்காது. அவர் எந்த எந்த மனிதரின் தோற்றத்திலும் வருவார். அவரை முஸாஃபஹா செய்து விட்டால் நாம் அவ்லியா ஆகலாம் என்று மார்க்க அறிவு இல்லாத மூடர்கள் கட்டிய கட்டுக் கதை தவிர இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வலது கையால் மற்றவரின் வலது கையைப் பிடிப்பதே முஸாஃபஹா செய்யும் சரியான முறையாகும்.
ஒரு உள்ளங்கையை மறு உள்ளங்கையில் சேர்த்தல் என்பது தான் முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடி அர்த்தமாகும்.

Sunday, August 14, 2011

கிளை மஷுரா


இன்று 14-8-2011 நோன்பு திறந்தபிறகு கிளை ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில் பித்ரா விநயோகம் சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.

உடல் நிலையை கண்டறிய எலக்ட்ரானிக்” தோல்


ஒரு நோயாளியின் உடல் நிலை மின் பரிசோதனை மூலம் செய்யப்படுகிறது. தற்போது எலக்ட்ரானிக் தோல் மூலம் அவற்றை கண்டறிய முடியும். அதை அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக நிபுணர் ஜான் ஏ.ரோஜர்ஸ் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த தோல் எலக்ட்ரானிக் கலவையால் தயாரிக்கப்பட்டது. மனிதனின் தலை முடியை விட மிகவும் மெலிதானது. இதை பாலியஸ்டரால் “பேக்கிங்” செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரானிக் தோல் பசை போன்று ஒட்டிக் கொள்ளக்கூடியது. அதை நோயாளியின் மணிக்கட்டில் “டாட்டூ” (பச்சை குத்து தல்) போன்று 24 மணி நேரம் அதாவது ஒருநாள் முழுவதும் ஒட்டிக் கொள்ள வேண்டும்.
அந்த தோல் நோயாளியின் உடல் வெப்பநிலை, இதய துடிப்பு போன்ற உடல் நிலையை கணக்கிட்டு அறிவிக்கும். உடலில் உள்ள உணர்வுகள் மூலம் இவை கண்டறியப்படுகிறது. இதன் மூலம் மூலையின் அதிர்வுகள், தசைகளின் இயக்கம், உடலில் இருந்து வெளியேறும் வெப்பம், பேச்சின் தன்மை போன்றவற்றை கண்டுபிடிக்க முடியும். மேலும், காயத்தின் தன்மையை அறிந்து அவற்றை குணப்படுத்தவும் இது உதவும்.

மாலைமலர்

Saturday, August 13, 2011

மாபெரும் பெண்கள் பயாண்

இன்று 13-8-2011 காலை சரியாக 11:30 மணியளவில் அடியக்கமங்கலம் மணற்கேனித் தெரு சேக் ஜமான் இல்லத்தில்(ஸ்ரீ லெட்சுமி நாராயனா வங்கி அருகில்) மாபெரும் சிறப்பு பெண்கள் பயாண் நடைப்பெற்றது.இதில் 2 ஆலிமாக்கள் உரைநிகழ்த்தினாற்கள்.




அதே மணற்கேனித் தெருவில் நடைபெற்று வரும் "ஸலாத்துன் நாரியா" இஸ்லாத்தில் இல்லாத கொள்கை என்று உணர்த்தும் வகையில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினாற்கள்.

Sunday, August 7, 2011

நோன்பு நிகழ்வுகழ்



 நமது ராஜாத் தெரு அடியக்கமங்கலம் தவ்ஹீத் மர்க்கஸ் சார்பாக தினசரி நோன்பு திறக்கும் ஏற்ப்பாடு செய்யபட்டுள்ளது.இதில் ஏராளமான ஆண்களும்,சிருவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.




 தினந்தோரும் இரவு சரியாக 8:45 மணிக்கு இஷா தொழுகையும், 9:00 மணிக்கு இரவு தொழுகையும் நமது ராஜாத் தெரு அடியக்கமங்கலம் தவ்ஹீத் மர்க்கஸில் சிறப்பாக நடந்து வருகிறது.இதில் ஆண்களும்,பெண்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.


இரவு தொழுகைக்கு பிறகு நம் பள்ளி இமாம் உரையாற்றுவார்கள்.பிறகு வினா-விடை போட்டி நடைப்பெறும்...