TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, December 25, 2011

தூய்மை இல்லாத பட்டக்கால்-தெரு பயணிகள் நிழற்க் குடை களம் இறங்கிய TNTJ மாணவரனி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) நமதூர் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு பயணிகள் நிழற்க் குடை தூய்மை இல்லாததை பற்றி "அடிப்படை வசதி இல்லா பட்டக்கால் தெரு" என்ற தலைப்பில் நமது கருத்துகளை பதிவு செய்தோம். அந்த நிழற்க் குடையில் உள்ளே உள்ள மாடு கழிவையும் போட்டோ எடுத்து உங்கள் பார்வைக்கு சமர்பித்தோம். ஆனால் இந்த அசுத்தம் பல நாட்களாக சுத்தம் செய்யபடாமல் நீடித்துவந்தது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் உள்ளே  செல்ல  தயங்கி  பேருந்து  வரும்  வரை கால்கடுக்க நின்று கொண்டு  பயணம் செய்தனர். இந்த அசுத்தத்தை ஊரில் உள்ள  பலரும் கண்டுக் காணாமல் சென்று கொண்டு இருந்தனர்.


அடியக்கமங்கலம்  ராஜாத் தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-(TNTJ) மாணவரினி சார்பாக 25-12-2011 ஞாயிற்றுக் கிழமை காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை சகோதரகள் சுத்தம் செய்யும் களத்தில் இறக்கினர்.



அதன் உள்ளே  மாட்டு கழிவுகளும்,காலி சாராய பாட்டில்களும், துண்டு பீடிகளும், வாட்டர் பாக்கெட்(water packet)ளும்,பாக்கு தாழ்களுமாக குப்பை குவிந்து இருந்தது. நமது சகோதரர்கள் தங்களது கரத்தினாலே சுத்தம் செய்தனர். பிறகு ஒட்டப் பட்டியிருந்த திரைப்பட போஸ்டர்களும்,கட்சி போஸ்டர்களும்,விளம்பர போஸ்டர்களும் கிழிக்கப்பட்டு தணிணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


இந்த சமுதாய சேவையை கண்ட அடியக்கமங்கலம் பொது மக்கள் தங்களது பணிக்கு வாழ்த்துகளையும்,நன்றியையும் தெருவித்தனர். ஏன் பேருந்தில் சென்ற கண்டக்டர் (CONDUCTOR) கூட அவரது வாழ்த்தை பதிவு செய்தார்.


ஊராட்சி மன்ற நிர்வாகம் இதை கண்டு காணாமல் இருப்பது வருத்ததிற்க்குரியது. இதுப்போல் அடிப்படை வசதி செய்தால் தான் அடியக்கமங்கலம் ஊராட்சியை தமிழ்நாட்டில்  முதல் ஊராட்சியாக மாற்ற முடியும்.


ஒவ்வொருவரும் இது போல் முயற்சி செய்து அடியக்கமங்கலம் ஊராட்சியை தமிழ்நாட்டில்  முதல் ஊராட்சியாக மாற்ற உதவி செய்யவும்...

குறிப்பு:-

(இனையதளத்தில்  சுத்தம் செய்யும் படங்கள் போட்டதற்க்கான காரணம்  மற்றவர்களும் கூச்சம் இல்லாமல் செயல்படுத்த தான்...பெருமைக்கு அல்ல...) 

இது போல் அடியக்கமங்கலம்  ராஜாத் தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-(TNTJ)யில் தாவா &  சமுதாய திட்டங்கள்  பல உள்ளன  பொதுமக்கள் ஆதரவு இருந்தால் விரைவில் செயல்படுட்டபடும்...இன்ஷா அல்லாஹ்...!

-TNTJ AYM செய்தி தொகுப்பாளர்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்