TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, January 29, 2012

காலமும்,கடமையும்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-01-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை சரியாக 4:30 மணிக்கு ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ஆலிமா ஜுலைஹா அவர்கள் "காலமும்,கடமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Thursday, January 26, 2012

சிவன் கோவில் தெருவில் பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-01-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 4:30 மணியளவில் நமதூர் சிவன் கோவில் தெரு சகோ.ரிபாய் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் இரண்டு ஆலிமாக்கள் உரையாற்றினார்கள்.

Tuesday, January 17, 2012

சிந்திக்க தூண்டும் பேனர்கள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-01-2012 அன்று இரண்டு இடங்களில் சிந்திக்க தூண்டும் குர் ஆன் வசனங்கள் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டது.

பட்டகால் தெரு பேருந்து நிறுத்ததில்...

செட்டி தெரு பேருந்து நிறுத்ததில்...

Monday, January 16, 2012

மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம்

 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-01-2012 அன்று நமது மர்க்கஸில் மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் சரியாக காலை 11:00 மணியளவில் நடைபெற்றது. இதில் சகோ.அஸ்கின் அவர்கள் இஸ்லாமிய இளைஞர்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் பிறகு மாணவரனியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒடிப் போ...! ஒடுக்கத்துப் புதனே


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-01-2012 ஞாயிறு மாலை சரியாக 4:30 மணியளவில் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இமாம் ஒலியுல்லாஹ் M.I.S.C, அவர்கள் ஒடிப் போ...! ஒடுக்கத்துப் புதனே என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து இரண்டவது அமர்வாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுப்பெற்றனர். அலஹம்துலில்லாஹ்...

அடியக்கமங்கலம் அரசு மருத்துவமணையின் அடிப்படை வசதியை ஆய்வு செய்த AYM TNTJ...


அடியக்கமங்கலம் புது ரோட்டில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை நல்ல முறையில் புதுப்பிக்கபட்டாலும் அதில் சில வசதிகள் இல்லை என்று தொடர்ந்து புகார்கள் நம் AYM TNTJ நிர்வாகிகளை நோக்கி வந்த கொண்டு இருந்தது. அதில் மிக முக்கியமான குறை பெண் மருத்துவர் இல்லை என்று தான். பெண்கள் தங்களது நோயை வெளிபடையாக ஆண் மருத்துவர்களிடம் தெரிவிக்க முடியவில்லை ஆகையால் நீங்கள் அங்கு பெண் மருத்துவர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

ஆகையால் 14-01-2012 சனிக்கிழமை காலை 12:30  மணியளவில் நமது AYM TNTJ நிர்வாகிள் அரசு மருத்துவமனை மருத்துவரை நேரில் சந்தித்து பெண் மருத்துவர் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் மருத்துவமனையின் தூய்மையை அறிய அவர்களின் உதிவியோடு அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்யப்பட்டது.


அதன் பிறகு அங்கு சிகிச்சை எடுக்க கூடிய பொதுமக்களிடம் நமது நிர்வாகிகள் நலம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்கள். மேலும் சிகிச்சை எடுக்க கூடியவர்களிடம் மருத்துவமனையின் பராமரிப்பு பற்றியும், குறைகள் கேட்டனர் அதற்கு அவர்கள் சிறப்பாக உள்ளதாக கூறினர்.

அதன் பின் மருத்துவமனையின் நிர்வாகிகளிடம் மக்களிடத்தில் ஏதாவது குறைகள் கண்டிர்களா என்று நிர்வாகிகள் கேட்டனர்.


அதற்கு அவர்கள் பொதுமக்கள் பலர் இந்த மருத்துவமனையை முறையாக பயன்படுத்துவதில்லை என்று பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த மருத்துவமனையில் அறுவை அரங்கு (OPERATION THEATRE), ஆய்வு கூடம் (LAB),  x-Rayநாய் கடி மருந்து போன்ற வசதிகள் இருப்பதாகவும், அதனால் சிலர் தான் பயன் அடைகிறார்கள் என்றும், பலர் இதை பயன்படுத்துவதில்லை என்று கூறினார்.

இவர் சொல்லகூடிய குறை அடியக்கமங்கலம் பொதுமக்களிடம் காணபடுகின்றது. குறிப்பாக முஸ்லிம் மக்களிடம் இது அதிகமாகவே உள்ளது. இங்கு இவர்கள் சிகிச்சை எடுப்பதில்லை. அதற்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கிறார்கள். 

சிலர் அடியற்கையில் இருந்து திருவாரூர் , நாகை சென்று சிகிச்சை எடுக்கின்றனர். அந்த தனியார் மருத்துவமணையின் மருத்துவர்கள் மற்றும் சேவிலியர்கள் அவர்களின் வேலை பளுவின் காரணமாக சிலநேரங்களில் கடிணமாக பேசுகிறார்கள், அவர்களின் செயல்கள் முறத்து தனமாகவும் அமைகிறது.அதை எல்லாம் பொருத்படுத்தாமல் கால் கடுக்க நின்று, செல்வங்களை இறைத்து சிகிச்சை எடுக்கிறார்கள்.

இவை எல்லாம் அரசு மருத்துவமனையின் சிகிச்சை சரி இல்லை என்று சொன்னால் கூட மனம் ஆறிவிடும் இவர்கள் கூறுவது என்ன தெரியுமா? அங்கு செல்வதற்கு வெக்கமாக இருக்கிறது என்கிறார்கள். இந்த காரணத்தினால் பலர் இந்த அரசு மருத்துவமனையை பயன் படுத்துவதில்லை.

சொல்ல போனால் இவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்கு தான் வெக்க பட வேண்டும் ஏன் என்றால்? அங்க அவர்கள் பேச கூடிய முறை, நடவடிக்கை, நோயாளியை அங்க போ! இங்க போ! என்று பந்தாடுவது போன்ற செயல்களை பார்த்தால் ரோஷம் உள்ளவர்கள் அங்கு செல்லமாட்டார்கள்.

அரசு பொதுவாக அனைத்து மக்களும் இலவசமாக பயன் பெற வேண்டும் என்பதற்க்காக தான் அரசு மருத்துவமனையை நிறுவியுள்ளது. அதை முறையாக பயன்படுத்தாமல் இருந்தால் நமக்கு தான் நஷ்டம்!!!

ஆக அடியக்கமங்கலம் மருத்துவமனையை முறையாக அனைத்து தறப்பு பொதுமக்களும் பயன்படுத்த வேண்டும் என்று AYM TNTJ கேட்டு கொள்கிறது.

(பெண் மருத்துவரை அமைக்க AYM TNTJ நிர்வாகிகள் விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்...)

Sunday, January 15, 2012

மரண படுக்குழியை அகற்ற கோறி ஊராட்சி மன்ற தலைவரிடம் வழியுறுத்தல்


அடியக்கமங்கலம் செட்டி தெரு (நாகை மெயின் ரோட்டில்) பல மாதங்களாக ஒரு மரண படுக்குழி இருந்து வருகிறது. இந்த குழி மெயின் ரோடு ஒரத்தில் ஏற்பட்டு இருப்பதால் வாகனங்கள் ஒதுங்கும் போது விபத்து உண்டாககூடிகிறது. இரவில் பொதுமக்கள் செல்லும் பொழுது விபத்துகள் ஏற்பட அதிக வாய்புள்ளது.

அதனால் கடந்த 14-01-2012 அன்று TNTJ நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் S.M.J.நிஜாமுதின் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்தியை தெரியபடுத்தினார். ஏற்கனவே பலமுறை மேல் அதிகாரியிடம் கூறிவிட்டதாகவும் அதை அவர்கள் மூடவில்லை என்று கூறினார். மேலும் பொங்கல் விடுமுறை முடிந்த உடன் அதை மூடிவிடுவதாகவும் அவர் கூறினார்.

ஆபத்தான் இக்குழியை விரைந்து அகற்றும் மாறு TNTJ AYM  நிர்வாகிகள் கேட்டுக்கொடனர்.

தினமனி பத்திரிக்கைக்கு நன்றி


அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ  நிர்வாகிகள் 05-01-2012 வியாழக் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் முனியநாதன் அவர்களிடம் பேருந்துகள் சரிவற நிற்தில்லை என்று மனு கொடுத்தனர்.
இந்த செய்தி கடந்த 10-01-2012 அன்று தினமனி செய்தாளில் வெளியானது.


பத்திரிக்கை செய்தி இதோ...
திருவாரூர், ஜன. 10: திருவாரூரை அடுத்துள்ள அடியக்கமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஜமாத்தின் அடியக்கமங்கலம் கிளைத் தலைவர் எஸ். அகமது சபியுல்வரா, செயலர் ஏ. முகமது சுல்தான் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:


திருவாரூரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடியக்கமங்கலம் கிராமத்தில் ஏறத்தாழ 12,000-த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் தினந்தோறும் தொழில் மற்றும் மருத்துவத் தேவைக்காக திருவாரூர் மற்றும் நாகைக்குச் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதேபோல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.


இதற்கு அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.
திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கிராமத்தின் வழியாகச் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் அடியக்கமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்படுவதில்லை.


இதனால், பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பெரும் சிரமத்துக்கும், காலதாமதத்துக்கும் ஆளாக நேரிடுகிறது.

எனவே, இந்த வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அடியக்கமங்கலம் செட்டித் தெரு மற்றும் பட்டக்கால் தெரு பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்ல மாவட்ட ஆட்சியர் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் இருவரும் கூட்டாக கேட்டுக் கொண்டுள்ளனர்.








Saturday, January 14, 2012

நலம் விசாரித்தல்

 விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சகோதரர் ஒருவரை திருவாரூர் மருத்துவ கல்லுரியில் 12-01-2012 வெள்ளிகிழமை அன்று அடியக்கமங்கலம் TNTJ நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Sunday, January 8, 2012

கலெக்டரிடம் மனு கொடுத்த TNTJ AYM நிர்வாகிகள்


அடியக்கமங்கலம் வழியாக கடந்து செல்லும் திருவாரூர் , நாகப்பட்டினம் பேருந்துகள் சரிவற அடியக்கமங்கலத்தில் நிறுத்துவது இல்லை.அவ்வாறு நிருத்தினாலும் பட்டக்கால் தெருவில் மட்டும் தான் நிற்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முன்பாவது தனியார் பேருந்துகள் தான் இவ்வாறு இருந்தது. ஆனால் இப்போது அரசு பேருந்துகளும் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டது.

அடியக்கமங்கலத்தில் இருந்து காலை நேரத்தில் மாணவர்கள் திருவாரூர் , நாகப்பட்டினம் பள்ளி கூடங்கள் செல்வதற்க்கு பேருந்துகள் நிற்பதில்லை, அது போல் அடியற்க்கை அரசு பள்ளிக்கு வெளியூரில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் செட்டித் தெரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்க்காததால் பட்டக்கால் தெருவில் இறங்கி அதிக தொலைவில் நடந்து செல்லவேண்டி இருக்கிறது. இதனால்  மாணவ, மாணவிகள் மன ஊழைச்சல் அடைகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ  நிர்வாகிகள் 05-01-2012 வியாழக் கிழமை திருவாரூர் மாவட்ட TNTJ துணை செயலாளர் இஸ்மத் பாட்ஷா தலைமையில் மாவட்ட ஆட்சியர் முனியநாதன் அவர்களிடம் மனு கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.

மேலும் அடியக்கமங்கலத்தில் பேருந்துகள் நிறுத்தவில்லை என்று பொதுமக்கள் பேருந்துகளை வழிமறைக்கின்றனர். இது சரியான தீர்வு அல்ல பேருந்து உரிமையாளர் செய்யும் தவறுக்காக பயணிகளாக பயனிக்கும் பொதுமக்களை சிரமப்படுத்துவது நியாயமல்ல....

இவ்வாறு மறைக்கப்படும் பேருந்துகளில் பயனிகளாக இருக்க கூடியவர்கள்
நோயாளியாக இருக்கலாம், வேலைக்கு செல்ல கூடியவராக இருக்கலாம், பள்ளி கூடங்களுக்கு செல்ல கூடியவர்களாக இருக்கலாம் அவர்களை வழிமறைத்து அவர்களின் வேலைகளை தடுப்பது எந்த விதத்திலும் நியாம் இல்லை...

இது போன்ற செயல்களுக்கு மார்க்கத்திலும் அனுமதி இல்லை...

Sunday, January 1, 2012

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

அல்லஹ்வின் உதவியால் 01-01-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை சரியாக 04:30 மணிக்கு ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.சகீர் அவர்கள் இஸ்லாமும் விஞ்யானமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதர, சகோதரிகள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.