TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, April 1, 2013

இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி ( தர்பியா ) முகாம்




அல்லாஹ்வின் வல்லமையால் 31-03-2013 அன்று TNTJ கிளை சார்பாக
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாபெரும் இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி ( தர்பியா ) முகாம் இரண்டு அமர்வாக நடைப்பெற்றது.
முதல் அமர்வு சரியாக காலை 10 :30 மணிக்கு தொடங்கியது. ஆரம்ப உரையாக மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள் “இஸ்லாமிய பார்வையில் நிர்வாகம்” என்ற தலைப்பில் ( ஆலோசனை செய்யும் முறை, நிர்வாகிகளின்  நேர்மை, அனுகுமுறை போன்றவற்றை பற்றி ) உரையாற்றினார்.



அதனை தொடர்ந்து மாநில பேச்சாளர் அப்துல் கபூர் மிஸ்பாஹி அவர்கள் “ சோதனை இல்லாமல் சொர்க்கமா? “ என்ற தலைப்பில் (சத்திய கொள்கையை ஏற்று கொன்றாள் அவர் பல சோனதனைக்கு ஆளக்காதான் படுவார் என்றும் மறுமையில் சொர்க்கம் செல்வார் என்றும் அடியக்கமங்கலத்தில் ஏகத்துவ கொள்கைக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளும் படைத்த இறைவனின் கிருபையால் சூழ்ச்சிகளை முறியடித்த விபரங்களையும் ) உரையாற்றினார்.



இந்நிகழ்ச்சிக்கு கிளை சார்பாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டாம் அமர்வு நடைப்பெற்றது.




அதில் TNTJ மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள் “தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ! ” என்ற தலைப்பில்  மற்ற ஜமாஅத்துக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்க்கும் உள்ள வித்தியாசங்களை ஆதரங்களுடன் கூறினார். பின்னர் அடியக்கமங்கலத்தில் உள்ள சுமையா டிரஸ்ட்-க்கும் தவ்ஹீத் ஜமாத்திற்க்கும் இடையே உள்ள பிரச்சனைகளை விளக்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஏரளாமான கொள்கை சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்…



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்