TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Wednesday, January 15, 2014

கி1&2:ஜனவரி 28 விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்12-01-2014 அன்று அடியக்கமங்கலம்
1 மற்றும் 2 வது கிளை சார்பாக மாலை சரியாக 4 மணியளவில் ஜனவரி 28 திருச்சியில் சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக அடியக்கமங்கலம் கிழசெட்டித் தெருவில் தெருமுனைகூட்டம் நடைபெற்றது. 



இதில் 2 வது கிளை தலைவர் முஹம்மது சுல்தான் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.



மாவட்டபேச்சாளர் பகுருதீன் அவர்கள் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்‌றினார்.இந்திய சுதந்திரத்துக்காக இஸ்லாமியர்கள் செய்த தியாகத்தையும் சுதந்திரத்துக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு செய்த துரோகத்தையும் பட்டியலிட்டார். 



இதில் இறுதியாக 1வது கிளை செயலாளர் முகம்மது சலிம் அவர்கள் நன்றியுரை வழங்கினார் 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்