TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Sunday, December 21, 2014

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்


அல்லாஹ்வின் வற்றாக் கருணையால் 20-12-2014 அன்று அடியக்கமங்கலம்
TNTJ கிளை 1&2 சார்பாக "இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்" இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி அடியக்கமங்கலம் ரயிலடித்தெரு 2 வது கிளை மர்கஸில் காலை சரியாக 9-30 மணியளவில் நடைபெற்றது.


அடியற்கையில் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி முதல் முறையாக நடைபெற்றதால் ஆண்களும் பெண்களும் சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் தவ்ஹித் ஜமாத்திற்கும் மற்ற இயக்கங்களுக்கும்  உள்ள வேறுபாடு, இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா? தர்ஹா வழிபாட்டை எதிர்ப்பது ஏன், என சுமார் 25 கேள்விகளுக்கு மாநில துனைத் தலைவர் "சையது இப்ராஹிம்" அவர்கள் அழகிய முறையில் பதில் அளித்தார்.

                     

கேட்கப்பட்ட கேள்விகள் சில :
    *டிரஸ்டை தவ்ஹித் ஜமாத் நீக்கியது ஏன்?
    *காரைக்கால் சலீமை தவ்ஹித் ஜமாத் வெளியேற்றியது ஏன்?
    *வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?
    *இஸ்லாத்தில் நான்கு பெண்களை திருமணம் செய்யலாமா?
    *ஜனாஸாவை தாமதமாக அடக்கம் செய்யலாமா?


இந்நிகழ்ச்சியின் இறுதியாக கிளை 2 தலைவர் அப்துல் காதர் அவர்கள் நன்றி உரை வழங்கினார்..அல்ஹம்துலில்லாஹ்







உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்