TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, November 18, 2016

அடியற்கையில் பிற அமைப்புகளின் பொதுக்கூட்டங்களை மிஞ்சிய தவ்ஹீத் ஜமாத்தின் தெருமுனைக்கூட்டம்


அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் 16-10-2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக நடுத்தெரு தாமரைக்கேணி முகப்பில் திருவாரூர் மாவட்ட துனை செயளாலர் S.அஹமது சஃபியுல்வரா அவர்கள் தலைமையில் தெருமுனைக்கூட்டம் & கோடைக்கால பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது...


இந்நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்ட பேச்சாளர் ஃபரூஜ் அவர்கள் *மார்க்க கல்வியின் அவசியம்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து நாகை மாவட்ட பேச்சாளர் சகோ. இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் *அல்லாஹ்விடம் நன்றி கெட்டவர்கள்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
பல ஆண்டுகள் தப்லிக் ஜமாஅத் மதராசாவில் பயின்று ,

பிறகு சுன்னத் ஜமாஅத் பள்ளியில் இமாமாக பணியாற்றிய அபுபக்கர் சித்திக் சாஆதி அவர்கள் பிஜே மற்றும் சுன்னத் ஜமாஅத் இடையிலான விவாதங்களை கண்டு தான் இருக்கும் அசத்திய கொள்கையை தூர வீசி தன்னை ஏகத்துவத்தின் இணைத்து கொண்ட வரலாறை அவருக்கே ஊறிய பாணியில் நகைச்சுவையோடு எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்து கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துகொண்ட அனைத்து மானவ மானவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட உடன் கிளை 2 தலைவர் முஹம்மது சுல்தான் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்..

இந்த பொதுக்கூட்டத்தின் சிறப்பே நடைபெற்ற இடம் தான் , அடியக்கமங்கலத்தின் அணைத்து பிசாதுக்களும் இங்கு இருந்து தான் துவங்குகின்றன. குளத்தின் கட்டையில் அமர்ந்து விடிய விடிய பிசாதுக்களும் , சமூக சீர்கேடுகளும் நடைபெறுகின்றன. இன்னும் சொல்ல போனால் சில ஆண்டுகளுக்கு முன்னாள் நம் பொதுக்கூடத்தில் கலகம் செய்ய வந்த சமூக விரோதிகள் கூடாரம் எனலாம்.

அந்த இடத்தில் இன்று தெருமுனை கூட்டம் நடத்தி சத்திய கருத்துக்களை போட்டு உடைத்து , தவ்ஹீத் ஜமாஅத் இந்த இடத்தில் கூட்டம் நடத்த கூடாது , அந்த இடத்தில் நடத்தக்கூடாது என்று கூவிய காலம் போய் இன்று விரும்பிய இடமெல்லாம் நம்மால் சத்திய பிரச்சாரம் செய்ய முடிகிறது என்றால் இது அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு வளர்ச்சி அடையும் தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமல் தான் சாத்தியம்.

குத்தாட்டம் ஆடினாலும் , வான வேடிக்கைகள் விட்டாலும் , தர்கா கப்ர்களை முட்டினாலும் சரி நாம டிரஸ்ட் வளர்ச்சியை பாப்போம் என்று ஒரு கூட்டம் தவ்ஹீத் பெயரை பயன்படுத்தி வசூல் வேட்டையில் இருக்க , இன்னொரு கூட்டம் அரசியல் வளர்ச்சியை பாப்போம் என்று தவ்ஹீத் பெயரை பயன்படுத்தி ஓட்டு வேட்டையில் இருக்க, போதிய பொருளாதாரம் இல்லாமல் சத்தியத்தை நிலைநிறுத்த பல பிரச்சனைகளுக்கு மத்தியில் யாருக்கும் அஞ்சாமல் இன்று நாம் தர்கா வணங்கிகளுக்கு எதிராக கூட்டம் நடத்துகிறோம் என்றால் நமது நோக்கம் அசத்தியத்தில் உள்ளவர்கள் நேர்வழியில் வர வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே தவிர புகழோ , பதவியோ , பெருமையோ , சொத்தோ நம் எண்ணம் அல்ல.

இதே இடத்தில் சில மாதங்களுக்கு முன்னாள் பிற அமைப்பால் மாநில நிர்வாகியை வைத்து நடத்திய பொதுக்கூட்டத்துக்கு கூடிய கூட்டத்தை விட, நம் ஜமாஅத்தால் சாதாரணமான தெருமுனை கூட்டத்துக்கு உள்ளூர் மக்கள் கூடி எண்ணிக்கையை முறியடிக்கிறார்கள் என்றால் மக்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத் சொல்கிற ஏகத்துவத்தில் சங்கமிக்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல ...

அடியக்கமங்கலம் கூடிய விரைவில் ஏகத்துவ வாடையை சுவாசிக்கும் இன்ஷா அல்லாஹ் ...
இந்த கூட்டம் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் செய்த , உடல் உழைப்பு கொடுத்த , பிராத்தனை செய்த அனைவருக்கும் நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்