TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, January 30, 2017

தட்டம்மை தடுப்பு ஊசி பற்றிய வதந்திக்கு பதில் (மெகாபோன் பிரச்சாரம்) : கிளை-2 (29/01/17)


அல்லாஹ்வின் மாபெறும் கிறுபையினால் 29/01/17 அன்று அஷர் தொழுகைக்குப்பிறகு அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக (இன்று ஒரு தகவல்) நிகழ்ச்சியில் சகோதரர் அப்துல்லாஹ் (மாநிலச் செயலாளர், TNTJ) அவர்கள் தட்டம்மை தடுப்பு ஊசி பற்றிய வதந்திக்கு பதில் அளித்த உரையினை மெகாபோன் மூலம் 15 இடங்களில் ஆடியோ பிரச்சாரம் செய்யப்பட்டது...!

மாற்று மத சகோதரர்களுக்கு புத்தக அன்பளிப்பு : கிளை-2 (29/01/17)


அல்லாஹ்வின் மாபெறும் கிறுபையினால் 29/01/17 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக மூன்று மாற்று மத சகோதரர்களுக்கு கீழ்கண்ட புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...!

ஐந்து இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2 (28/01/17)


அல்லாஹ்வின் மாபெறும் கிறுபையினால் 28/01/17 அன்று அஷர் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக புதுமனைத்தெரு,ரயிலடித்தெரு, பட்டக்கால்தெரு,நடுத்தெரு,பள்ளிவாசல்தெரு ஆகிய ஐந்து இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது...




இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் : கிளை-1 (26/01/17)


இந்திய_குடியரசு தினத்தை முன்னிட்டு 26/01/17 அன்று
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 1 நடத்திய
இரத்த_தான_முகாம் மிக சிறப்பாக நடைப்பெற்றது...
காலை 9 மணி முதலே குருதி கொடையாளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.
முகாம் 2 மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டும்
சகோதரர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால்
2.30 மணி வரை முகாமின் நேரம் நீட்டிக்கப்பட்டது...
9 முஸ்லிமல்லாத சகோதரர்கள், ஒரு சகோதரி உள்பட 37 நபர்கள் குருதிக்கொடை அளித்தனர்....


அனைவருக்கும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
முகாம் அன்று மழை பெய்தாலும் கொடையாளர்கள் வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
அவசர தேவைக்கு திருவாரூர் வடக்கு மாவட்ட ஆம்புலண்ஸ் ம் ரெடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது....
இம்முகாமிற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு செய்த அனைவருக்கும்
TNTJ AYM 1 சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

ரயிலடி,நெடுங்குடி பகுதிகளில் மாற்று மத தாவா : கிளை-2 (19/01/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 19/01/17 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு,நெடுங்குடி பகுதிகளில் மாற்று மத சகோதரர்களுக்கு " இஸ்லாம் கூரும் கடவுள் கொள்கை" எனும் தலைப்பிலான நோட்டீஸ் கொடுத்து மாற்றுமத தாவா செய்யப்பட்டது...!

மாற்று மத தாவா : கிளை-2 (16/01/17)


மாற்று மத தாவா: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 16/01/17 இன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக மாற்றுமத சகோதரர்களுக்கு யார் இவர்..? (முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்) மற்றும் இஸ்லாமிய கடவுல் கொள்கை என்ற தலைப்புகளிலான நோட்டிஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது..,!

ஷிர்க்கிற்கு எதிரான தாவா : கிளை-2 (19/01/17)


அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் 19/01/17 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சகோதரர் ஒருவர் வீட்டில் ஷிர்க் பொருளான தகடு அகற்றம் செய்து தாவா செய்யப்பட்டது...!

ரயிலடித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (15/01/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15/01/17 அன்று மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பில் ரயிலடித்தெருவில் சகோதரர் ஹாஜா சர்புதீன் அவர்களது இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது பைசல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்....!

மாற்று மத சகோதரர்களுக்கான இலவச புக் ஸ்டால் : கிளை-2 (17.01.2017)


அல்லாஹ்வின்_மாபெரும்_கிருபையினால் 17.01.17 அன்று TNTJ அடியக்கமங்கம் கிளை 2  (இக்ரா தவ்ஹீத் நூகலம்) சார்பாக புக் ஸ்டால் அமைக்கப்பட்டது...! இதில் மாற்று மத சகோதரர்களுக்காக …
* முஸ்லீம் தீவிரவாதிகள்?
* மாமணிதர் நபிகள் நாயகம்
* பைபிலில் நபிகள் நாயகம்
* இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறதா*

போன்ற புத்தகங்களை வைத்து ஸ்டால் அமைக்கப்பட்டது..
இதில் பல மாற்று மத சகோதரர்களும், இளைஞர்களும் ஆர்வமாக வந்து கேட்டு பெற்றுக்கொண்டனர்அவர்களுக்கு இஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம் என்பதையும், தீவிரவாதத்தை சற்றும் போதிக்காத மார்க்கம் எனவும் விளக்கி எடுத்துரைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
- TNTJAYM 2


தனி நபர் தாவா : கிளை-1 (12.01.2017)

அடியக்கமங்கலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்ராஜா தெரு கிளை 1 மர்கஸ் சார்பில் 12.01.2017 வியாழக் கிழமை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஒரு சகோதரரை சந்தித்து தனி நபர் செய்யப்பட்டது....
இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழுதல், ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளிவாசல்கள், நமதூர் உலமாக்கள் செய்யும் மார்க்க விரோத செயல்கள் பற்றி குர்ஆன் சுன்னா ஒளியில் விளக்கம் சொல்லப்பட்டது....

மணற்கேனித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-1 (08/01/17)

அல்லாஹ்வின் மாபெரும் நாட்டத்தால் அடியக்கமங்கலம் கிளை 1 ராஜா தெரு மர்கஸ் சார்பில்கடந்த 08/01/17 ஞாயிறு மாலை 4 மணிக்கு மணற்கேணித் தெரு சகோ.நியாஜ் இல்லத்தில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது...

மாற்று மத தாவா : கிளை-1&2 (05/01/17)


அடியக்கமங்கலம் TNTJ கிளைகள் சார்பில் இன்று 5/1/2017 வியாழன் ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு முஸ்லிமல்லாத மக்கள் பலரை சந்தித்து இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்து தாஃவா செய்யப்பட்டது.....






புத்தக வினியோகம் : கிளை-1 (04/01/2017)


இன்று 04/01/2017 கிளை 1 TNTJ ராஜா தெரு மர்கஸ் சார்பில் ஏற்கனவே புத்தகம் கொடுக்கப்பட்ட மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நூல் வழங்கப்பட்டது....
அவருடைய ஹிதாயத்திற்காக துஆ செய்யுங்கள்...👇🏿

கோட்டாச்சியர் அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் வினியோகம் : கிளை-1 (26/12/16)

அடியக்கமங்கலம் கிளை 1 சார்பில் 26/12/16 அன்று கோட்டாச்சியர் அவர்களை சந்தித்து கீழ்க்கண்ட இஸ்லாமிய ஆக்கங்கள் வழங்கப்பட்டன
1.மனுதனுக்கேற்ற மார்க்கம் நூல்
2.பொது சிவில் சட்டம் தேவையா? நூல்
3.இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பிரசுரம்
4.யார் இவர் பிரசுரம்...
யா அல்லாஹ்! இவருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடைய செய்வாயாக!

அவசர இரத்த உதவி : கிளை-2 (17/12/16)


 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 17/12/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக திருவாருரை சேர்ந்த சகோதரி ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்காக "B" possitive இரத்தம் வழங்கப்பட்டது...!

திருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2 (19/12/2016)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 19/12/2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் *இக்ரா தவ்ஹீத் நூலகம்* சார்பாக ரமேஸ் என்ற சகோதரர் கேட்டுக்கொண்டதன் பெயரில் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...! அல்ஹம்துலில்லாஹ் சகோதரர் நேர்வழி பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்....

மாற்று மத சகோதரர்களுக்கு புத்தகம் அன்பளிப்பு : கிளை-1 (19/12/16)

அழகிய தாஃவா! அடியக்கமங்கலம் அக்ஸாவில்!! 19/12/16 அன்று கிளை 1 ராஜா தெரு மஸ்ஜித் அக்ஸாவிற்கு சாரம் கட்டும் வேலைக்கு வந்த 3 மாற்று மத மக்களுக்கு "மனுதனுக்கேற்ற மார்க்கம்" நூல் இஸ்லாத்தை பற்றி அறிமுகம் செய்து அன்பளிப்பாக வழங்கப்பட்டது....

அவர்களது ஹிதாயத்திற்கு துஆச் செய்வீர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
AYM 1.

மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2 (14/01/16)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 14/01/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக பன்னீர் செல்வம் என்ற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது...!

அடியக்கமங்கலத்தில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு தொழுகை!! (ஜனவரி 8 2017)

ஜனவரி 8 2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடுத்தெரு தாமரைக்கேணி குளம் அருகில் வைத்து மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.......
மாவட்ட பேச்சாளர் சகோதரர் A.M.ஃபைசல் அவர்கள் தொழுகை முறைகளை விளக்கி, நபிகளார் மழைக்காக சிறப்பாக காட்டித் தந்த துஆக்களை எடுத்துச் சொன்னார்.
விவசாயிகள் மரணங்கள், கடும் பஞ்சம், வறட்சி, பயிர் நெல் விளைச்சல்களுக்கு போதிய நீர் வரத்து இல்லாமை இது போன்ற சூழ்நிலையில் இறைவனிடத்தில் தொழுது பிரார்த்தனை செய்ய இப்படியொரு சிறப்பு தொழுகை இஸ்லாத்தில் இருக்கிறது என்பதை நமதூர் முஸ்லிம் மக்களும், முஸ்லிமல்லாத மக்களும், குறிப்பாக காவல் துறை நண்பர் களும் தெரிந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகை முறைகள் போலவே நடைப்பெற்ற மழை தொழுகைக்கு பிறகு நபிவழிப்படி அனைவரும் தங்கள் ஆடைகளை மாற்றி போட்டுக் கொண்டவர்களாக, புறங்கைகள் வானை நோக்கி உயர்த்தி தங்கள் பாவங்களுக்காக துஆச் செய்தனர்.
சபை கலையும் துஆ ஓதி அனைவரும் ஒரு நபிவழியை நிறைவேற்றிய திருப்தியோடு கலைந்து சென்றனர்...
இந் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 4 2016 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு வர்தா புயலினால் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது....
மேலும் இப்படி ஒரு சிறப்பிற்குரிய மழைத் தொழுகையை கூட பள்ளிவாசல் தெருவில் நடத்தக் கூடாது என்று காவல்துறை யிடம் புகார் தெரிவித்த
#முஸ்லிம்? மஹாஜன சபைத் தலைவரின் மிரட்டல்களுக்கும், அவருக்கு ஒத்து ஊதிய முஸ்லிம்? பெயர்தாங்கிகளுக்கும் நமதூர் ஜமாத்தார்கள் தகுந்த பாடம் புகட்டி தொழுகையில் நாம் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கலந்து கொண்டது அவர்களையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது என்றால் அது மிகையல்ல....
ஒரு பெரிய தொகையை பெற்றுக் கொண்டு கூத்தாடிகளை ஊர் உள்ளே விட்டு ஹராமாக்கப்பட்ட சினிமா வுக்கு அனுமதி வழங்கியவர்கள், நபிவழி மழைத் தொழுகைக்கு தடை போட சொல்லி காவல் துறையை ஏவுகிறார்கள் என்றால் இவர்கள் இஸ்லாமியர்களா????
அவனுடைய
மார்க்கத்தை உலகமெங்கும் கொண்டு செல்ல அல்லாஹ் நம்மை ஒரு கருவியாக ஆக்கினான் எனும் போது, யா அல்லாஹ் உன்னை அதிகமதிகம் புகழ்கிறோம்
மத்ஹப் மஹாஜன சபையோர்களின் தவறுகளையும், இஸ்லாமிய மார்க்க விரோத போக்குகளையும் கண்டித்து கூட்டம் போட்ட போது மவுனியாக இருந்தவர்கள், மழைத் தொழுகைக்காக இப்படி செயல்பட்டார்கள் எனும் போது அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்வோம்.
அதே நேரத்தில் இது போன்ற உருட்டல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சும் கூட்டமல்ல தவ்ஹீத் ஜமாஅத் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
அடியக்கமங்கலம்
கிளை 1 ராஜா தெரு,
கிளை 2 ரயிலடித்தெரு,
திருவாரூர் வடக்கு
மாவட்டம்.

மாற்று மத தாவா : கிளை-1 (15.1.2017)


அல்லாஹ்வின் கிருபையினால்  15.1.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பில் முஸ்லிமல்லாத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாமிய கடவுள் பற்றிய கலந்துரையாடல் முறையில் தனி நபர் தாஃவா செய்யப்பட்டது.....

Saturday, January 14, 2017

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் : கிளை -2 12/12/16


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 12/12/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பீர் முஹம்மது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது..!

இதில் கீழ்கண்ட நபர்கள்  கிளை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்::

கிளைத்தலைவர் : அஹமத் சபியுல்வரா - 9994339367
 செயலாளர் : முஹம்மது அனஸ் - 9080668290
 பொருளாளர் : முஹம்மது ரிஃபாஸ் - 8870643374
துணை தலைவர்  : முஹம்மது அஸாருதீன் -9688718560
துணை செயலாளர்: அஹமது கபீர் - 9994046734



பெண்கள் பயான் : கிளை-2



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 17/12/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்  அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹித் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது..! இதில் கூத்தாநல்லூர் ஆலிமா பர்ஹானா  அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள்...!

மர்க்கஸ் அருகில் சுவர் விளம்பரம் : கிளை-2 14/12/16



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 14/12/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹித் மார்க்கஸ் அருகில் உணர்வு, ஏகத்துவம் ,தமிழன் டிவியில் ஜமாஅத்