TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Monday, January 30, 2017

அடியக்கமங்கலத்தில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு தொழுகை!! (ஜனவரி 8 2017)

ஜனவரி 8 2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடுத்தெரு தாமரைக்கேணி குளம் அருகில் வைத்து மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.......
மாவட்ட பேச்சாளர் சகோதரர் A.M.ஃபைசல் அவர்கள் தொழுகை முறைகளை விளக்கி, நபிகளார் மழைக்காக சிறப்பாக காட்டித் தந்த துஆக்களை எடுத்துச் சொன்னார்.
விவசாயிகள் மரணங்கள், கடும் பஞ்சம், வறட்சி, பயிர் நெல் விளைச்சல்களுக்கு போதிய நீர் வரத்து இல்லாமை இது போன்ற சூழ்நிலையில் இறைவனிடத்தில் தொழுது பிரார்த்தனை செய்ய இப்படியொரு சிறப்பு தொழுகை இஸ்லாத்தில் இருக்கிறது என்பதை நமதூர் முஸ்லிம் மக்களும், முஸ்லிமல்லாத மக்களும், குறிப்பாக காவல் துறை நண்பர் களும் தெரிந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகை முறைகள் போலவே நடைப்பெற்ற மழை தொழுகைக்கு பிறகு நபிவழிப்படி அனைவரும் தங்கள் ஆடைகளை மாற்றி போட்டுக் கொண்டவர்களாக, புறங்கைகள் வானை நோக்கி உயர்த்தி தங்கள் பாவங்களுக்காக துஆச் செய்தனர்.
சபை கலையும் துஆ ஓதி அனைவரும் ஒரு நபிவழியை நிறைவேற்றிய திருப்தியோடு கலைந்து சென்றனர்...
இந் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 4 2016 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு வர்தா புயலினால் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது....
மேலும் இப்படி ஒரு சிறப்பிற்குரிய மழைத் தொழுகையை கூட பள்ளிவாசல் தெருவில் நடத்தக் கூடாது என்று காவல்துறை யிடம் புகார் தெரிவித்த
#முஸ்லிம்? மஹாஜன சபைத் தலைவரின் மிரட்டல்களுக்கும், அவருக்கு ஒத்து ஊதிய முஸ்லிம்? பெயர்தாங்கிகளுக்கும் நமதூர் ஜமாத்தார்கள் தகுந்த பாடம் புகட்டி தொழுகையில் நாம் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கலந்து கொண்டது அவர்களையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது என்றால் அது மிகையல்ல....
ஒரு பெரிய தொகையை பெற்றுக் கொண்டு கூத்தாடிகளை ஊர் உள்ளே விட்டு ஹராமாக்கப்பட்ட சினிமா வுக்கு அனுமதி வழங்கியவர்கள், நபிவழி மழைத் தொழுகைக்கு தடை போட சொல்லி காவல் துறையை ஏவுகிறார்கள் என்றால் இவர்கள் இஸ்லாமியர்களா????
அவனுடைய
மார்க்கத்தை உலகமெங்கும் கொண்டு செல்ல அல்லாஹ் நம்மை ஒரு கருவியாக ஆக்கினான் எனும் போது, யா அல்லாஹ் உன்னை அதிகமதிகம் புகழ்கிறோம்
மத்ஹப் மஹாஜன சபையோர்களின் தவறுகளையும், இஸ்லாமிய மார்க்க விரோத போக்குகளையும் கண்டித்து கூட்டம் போட்ட போது மவுனியாக இருந்தவர்கள், மழைத் தொழுகைக்காக இப்படி செயல்பட்டார்கள் எனும் போது அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்வோம்.
அதே நேரத்தில் இது போன்ற உருட்டல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சும் கூட்டமல்ல தவ்ஹீத் ஜமாஅத் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
அடியக்கமங்கலம்
கிளை 1 ராஜா தெரு,
கிளை 2 ரயிலடித்தெரு,
திருவாரூர் வடக்கு
மாவட்டம்.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்