TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, October 28, 2017

மது,புகை தவிர்ப்பீர் விளிப்புணர்வு போஸ்டர் : கிளை-2 (23/10/2017)



அல்லாஹ்வின் கிருபையினால 23/10/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக புகை,மது தவிர்ப்பீர் விளிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது...!

 

1600 நபர்களுக்கு நீலவேம்பு கசாயம் வினியோகம் : ( 20/10/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் TNTJ கிளைகள் சார்பாக இன்று காலை
20/10/2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு தாமரைகுலத் தெருவில் 1600 நபர்களுக்கு நீலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது...!அல்ஹம்துலில்லாஹ்...!

அவசியத்தை கருதி மீண்டும் களம் இறங்கியது தவ்ஹீத் ஜமாஅத் : 19/10/2017)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக கடந்த நாட்களில் 12,000 க்கு மேற்பட்ட மக்களுக்கு சித்தாநல்லூர் , மேலத்தெரு , ஆண்டிப்பாளையம் ,அடியக்கமங்கலம் என கிராமம் கிராமமாக சென்று நீலவேம்பு கசாயம் வழங்கி அடியக்கமங்கலத்தில் சாதனை படைத்தது.
இதனை கண்ட முன்னாள் சேமங்கலம் ஊராட்சி தலைவர் (Ex)அன்பு  அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவையை தானாக முன்வந்து பாராட்டினார். இதன் தொடர்ச்சியாக மக்கள் நல...ன் கருதி மீண்டும் களத்தில் இறங்கியது தவ்ஹீத் ஜமாஅத் .
ஆம் இன்று காலை 19 -10 -2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை 1 சார்பில் மேலச்செட்டித் தெருவில் 650 மக்களுக்கும் , கிளை 2 சார்பாக தெற்கு தெருவில் 750 மக்களுக்கு (மொத்தம் 1400) இன்று விநியோகிக்கப்பட்டது. ...

கிளை பொதுக்குழு கூட்டம் : கிளை-2 (18/10/2017)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 பொதுக்குழு கூட்டம்  18/10/2017 அன்று இஷா  தொழுகைக்குப்பிறகு மாவட்ட துனை செயளாலர் பாஜில் அவர்களது தலைமையில் நடைபெற்றது..! இதில் விடுபட்ட நிருவாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்..!

இஸ்லாமிய விளிப்புணர்வு பொதுக்கூட்டம் : (15/10/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு பழைய EB முன்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கிளைகள் சார்பாக 15-10-2017 அன்று மாலை 6.10
மணிக்கு இஸ்லாமிய விழிப்புனர்வு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.